Header

Sri Lanka Army

Defender of the Nation

07th July 2017 17:24:10 Hours

22 ஆவது இராணுவத் தளபதி மத அனுஷ்டானங்கள் மற்றும் அணிவகுப்பு மரியாதைகளுடன் கடமைப் பொறுப்பேற்பு

இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் என் யூ எம் எம் டபிள்யூ சேனாநாயக்க ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்பி அவர்கள் இராணுவ கௌரவத்துடன் இராணுவத் தலைமையகத்தில் புதன் கிழமை (05) கடமைப் பொறுப்பேற்றதுடன் இந் நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் மைதானத்திற்கு வருகை தந்த புதிய இராணுவத் தளபதியை இத் தலைமையக கட்டளை அதிகாரியவர்கள் மற்றும் விசேட படைப் பிரிவின் தளபதியவர்களின் வரவேற்றதன் பிற்பாடு இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் இடம் பெற்றது.

இராணுவ தளபதியவர்கள் பிரதி பதவிநிலை அதிகாரி மேஜர் ஜெனரல் ரோஹண உடவத்த மூலம்அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டதோடு புதிய தளபதியவர்கள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மூலம் விளையாட்டு அரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட புதிய இராணுவத் தளபதியவர்கள் விசேட படைப் பிரிவின் கப்டன் ஆர் ஏ டி ஏ ரணசிங்க உள்ளடங்களாக அணிவகுப்பு கட்டளை அதிகாரிகள் இருவர் மற்றும் படைவீரர்கள் 48 பேர் இணைந்த நடாத்திய அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டார்.

மேலும் இராணுவ பேண்ட் வாத்தியக் குழுவினரால் “நகுனு தேஷானுராகி” பாடல் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் இராணுவ அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய தளபதியை பதவிநிலை அதிகாரிகள் உள்ளடங்களாக உயர் அதிகாரிகள் புதிய இராணுவத் தளபதியை வரவேற்றனர்.

இதன் அடுத்த கட்டமாக பௌத்தமத அனுஷ்டானங்களுக்கு அமைவாக அகுருடியே விமலவங்க தேரர் மூலம் பஞ்ச சீலம் இசைக்கப்பட்டு இராணுவத் தளபதியவர்களால் மங்கள விளக்கேற்றல் நிகழ்வும் இடம் பெற்றதுடன் இச் சுபவேளை புதிய தளபதியவரகள் இராணுவத் தளபதி பதவியின் கடமைப் பொறுப்பை கையொப்பமிட்டு ஏற்றுள்ளார். இத் தளபதியவர்களின் பாரியார் சந்திரிக்கா சேனாநாயக்க அம்மனியவர்களும் குடும்பத்தாரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கொழும்பு ஆனந்தா கல்லுhரியின் முன்னய உப அதிபரான அதபத்துகந்தே ஆனந்த தேரர் இ குணுபிடியே கங்காராம விகாரையின் விகாராதிபதி மற்றும் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் மத குருமாரும் கலந்துகொண்டு தமது ஆசிகளை புதிய இராணுவத் தளபதிக்கு வழக்கினர்.

இம் மதவழிபாடுகளின் நிறைவடைந்த நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் பௌத்த மத தேரர்களுக்கு பௌத்த தேரர்களுக்குறிய அன்னப் பாத்திரம் (அட்டபிரிகர) போன்றன வழங்கப்பட்டது.

Sports News | nike air jordan lebron 11 blue eyes black people