Header

Sri Lanka Army

Defender of the Nation

07th July 2017 17:14:29 Hours

முதல் தடவையாக வெளிநாட்டு பிரதிநிதி புதிய இராணுவ தளபதியை சந்திப்பு

விடைபெற்றுச் செல்ல இருக்கும் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ் வெள்ளிக் கிழமை (07) திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை சந்தித்தார்.

இருவருக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது அமெரிக்க நாடுகளில் இடம்பெறும் பயிற்சிகளில் எதிர்வரும் காலங்களில் கலந்து கொள்வது தொடர்பாகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இராணுவ தளபதிக்கு தெரிவித்தார்.

கடந்த தினங்களில் எமது நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க கெடெற் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவத்தினர் வழங்கிய ஒத்துழைப்பையிட்டு நன்றியை தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் காலங்களில் அமெரிக்காவிலிருந்து பயிற்சியின் நிமித்தம் வரும் நபர்களுக்கு இந்த ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த அமெரிக்க துாதரக ஆலோசகர் எமது நாட்டில் சேவையாற்றிய காலப் பகுதிகளில் பூரண ஒத்துழைப்புடன் ஆற்றிய சேவையினை கெரவிக்கும் முகமாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இராணுவ தளபதி தனது பதவி நியமனத்தின் பின்பு முதல் தடவையாக சந்தித்த வெளிநாட்டு பிரதிநிதி லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ் ஆவார். இவர் இலங்கையில் பிறந்தவர் இவரது தந்தையார் கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தில் கடமை புரிகின்றார். பின்பு இராணுவ தளபதியினால் அமெரிக்க துாதரக ஆலோசகருக்கு நினைவு சின்னம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜி. வி ரவிபிரிய மற்றும் இராணுவ சேவை உதவி பிரதானி கலந்து கொண்டனர்.

bridgemedia | New Releases Nike