06th July 2017 08:52:50 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைத் தலைமையக படைப் பிரிவினரால் துனுக்காய்ப் பிரதேசத்தில் உள்ள தென்னியன்குளம் நீர்க் கால்வாய் சுத்திகரிக்கப்பட்டது.
அந்த வகையில் தென்னியன்குளம் நீர்க் கால்வாயானது வரலாற்றிலேயே முதன்மைவாய்தாக திகழ்கின்றது. அத்துடன் இக் கால்வாயானது விவசாயப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் இப் பிரதேசத்தில் உள்ள 200 குடும்பத்தினர் இக் குளத்தினால் விவசாயத்திற்காக பயன் பெறுகின்றனர். இவ் நீர்க்கால்வாயனது 700 ஏக்கர் பரப்பளவிலான பிரதேசத்திற்கு ஊடறுத்துச் செல்கின்றது. மேலும் இந் நீர்க் கால்வாயின் ஒரு பகுதி 6.5 கிமீ வரையிலும் மற்றய பகுதியானது 5.5 கிமீ பரப்பிற்கும் பாய்ந்து செல்கின்றது.
65ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் தலைமையில் 1000 படைவீரர்கள் மற்றும் 200 பொது மக்கள் இணைந்து இப் பணிகளில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் இப் பணியின் மூலம் இராணுவம் மற்றும் பொது மக்களுக்கிடையிலான உறவு முறையை மேம்படுத்துவதற்கான செயற்பாடாக விளங்குகின்றது. அத்துடன் இந்த சுத்திகரிப்பு இடம்பெற்ற இடத்திற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களும் பங்கேற்றார்.
Running sport media | Buy online Sneaker for Men