Header

Sri Lanka Army

Defender of the Nation

04th July 2017 11:34:26 Hours

யாழ்ப்பாண பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரின் பாவனையில் இருந்த 54 ஏக்கர் இடம் குடியிருப்பாளர்களுக்கு பாரமளிப்பு

யாழ்ப்பாண மாவட்ட மக்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல் வாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் உட்பட தயிட்டி கிராம சேவகர் பிரிவிற்கு உரிய 54 ஏக்கர் இடம் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு திங்கட் கிழமை (03) திகதி வழங்கப்பட்டது.

இடம்பெயர் மத்திய நிலையங்களில் தங்கியிருக்கும் 187 குடும்பங்கள் இந்த இடம் விடுவிப்பதன் நிமித்தம் 30 வருடங்களின் பின் தங்களது சொந்த இடங்களில் குடியிருப்பதற்காக செல்கின்றனர். இதற்கு முன்பு யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07ஆம் திகதி ஊரணி பிரதேசத்தில் உள்ள துறைமுகம் உட்பட 35 ஏக்கர் நிலப்பரப்பு நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

திங்கட் கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வு தேசிய ஒருங்கினைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு, புணர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு, யாழ்ப்பாண மாவாட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டது. யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களுக்கு இந்த இடங்கள் உத்தியோக பூர்வமாக பாரமளிக்கப்பட்டது.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் இப் பிரதேசத்தில் வசிக்கும் இடம் பெயர்ந்த மக்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் நிமித்தம் பாதுகாப்பு அமைச்சு, முப்படை தளபதிகள், மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்பு இந்த இடங்கள் வழங்கப்படுகிறது.

இந் நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி, அரச உத்தியோகத்தர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் கிராம வாசிகள் கலந்து கொண்டனர்.

Buy Kicks | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger