Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2017 11:57:16 Hours

புதிய பிரதம பாதுகாப்பு பதவிநிலை பிரதானியாக பதவியேற்பு

இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா பாதுகாப்பு பிரதம பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக வியாழக்கிழமை (29)ஆம் திகதி சமய அனுஸ்டானங்களுடன் பண்டாரநாயக சர்வதேச மண்டபசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பாதுகாப்பு பதவிநிலை அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார்.

பாதுகாப்பு அமைச்சின் மைதானத்திற்கு வருகை தந்த புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, பிரதான நுழைவாயிலில் வைத்து இராணுவ தலைமையக கட்டளை அதிகாரியினால் வரவேற்றதன் பின்பு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பாதுகாப்பு பதவி நிலை அலுவலகத்தின் பணிப்பாளர் ஜெனரல் பிரதான பதவி நிலை அதிகாரி மேஜர் ஜெனரல் நிர்மால் தர்மரத்ன அவர்கள் வரவேற்றதன் பின்பு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அலுவலகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியை மேஜர் ஜெனரல் நிர்மால் தர்மரத்ன வரவேற்றார். பின்பு சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றி தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலக நபர்களுடன் தேநீர் விருந்தோம்பலில் ஈடுபட்டு பின்பு அலுவலகர்களுடன் குழு புகைப்படத்திலும் இணைந்திருந்தார். இந் நிகழ்விற்கு முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

url clone | Nike Shoes, Sneakers & Accessories