27th June 2017 18:33:39 Hours
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2017 ஜீன் மாதம் 27ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவத்தின் 21ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா (ஆர்டபிள்யூபீ விஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ) அவர்கள் இராணுவ ஜெனரல் பதவிநிலை மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
1980 பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இராணுவ சேவையில் இணைந்J 37 வருடம் தொடர்ந்து சிறந்த சேவையில் மூலம் ஜெனரல் சில்வா 1981 ஜூலை மாதம் 18ஆம் திகதி 2ஆவது லெப்டினன்ட் ஆக இலங்கை முதலாவது பொறியியல் படைப்பிரிவில் இணைந்து சேவையை ஆரம்பித்தார். 1985இல் கெப்டன் ஆகவும் 1989ல் மேஜராகவும் 1994ல் லெப்டினண்ட் கேர்ணல் ஆகவும் 1997ல் கேர்zல் ஆகவும் 2003ல் பிரிகேடியராகவும் 2009 நவம்பர் மாதம் 30ம் திகதி மேஜர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்ற இவர், 2015 பெப்ரவரி மாதம் 22ம் திகதி லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு வந்தார்.
37 வருட கால புகழ்மிக்க இராணுவ சேவையில் ஈடுபட்ட பெருமைக்கு சொந்தக்காரரான ஜெனரல் த சில்வா 2013 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன் 2014 மே மாதம் 16ம் திகதி முதல் ரஷ்யாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து வெளிநாடு சென்றார்.
பிரதம அதிகாரி மற்றும் பிரதான ஆலோசகர் பதவிகள் என பல பதவிகளை வகித்துள்ள ஜெனரல் த சில்வா இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட முன்னர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டுள்ளார். அத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைப்படைகளின் கட்டளை தளபதியாகவும் கிழக்கு மாகாண முன்னரங்கு காவல் பகுதியின் மற்றும் கிளிநொச்சி முன்னரங்கு காவல் பகுதிகளின் கட்டளைத் தளபதி பதவி வகித்துள்ள இவர் பொறியியல் படைப்பிரிவின் தளபதியாகவும் 512 மற்றும் 562 தரைப் படையணிகளின் படைத் தளபதிகளாகவும் செயற்பட்டுள்ளார்.
இது தவிர இராணுவ தலைமையகத்தின் இராணுவச் சேவை செயலாளராகவும், நடவடிக்கை பணிப்பாளராகவும், இராணுவச் சேவை மேலதிக செயலாளராகவும், திட்டமிடல் பணிப்பாளராகவும், ஆளணி நிர்வாக பணிப்பாளர் சபையின் கேர்னல் ஆகவும் பல நிர்வாக பதவிகளை வகித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை அதிகாரி, பிரதான பயிற்றுவிப்பாளர் மற்றும் ஒழுங்குபடுத்தல் அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார். இம் மூன்று பதவிகளையும் வகித்த முதலாவது அதிகாரியாகவும், இவர் உள்ளார். இது தவிர தியதலாவயிலுள்ள இலங்கை இராணுவ அகடமியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும், இலங்கை இராணுவத்தின் பொறியியல் பாடசாலையின் கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.
இலங்கை பொறியியல் படைப்பிரிவின் புகழ்மிக்க அதிகாரியான ஜெனரல் த சில்வா 06ஆவது கள பொறியியல் ரெஜிமன்ட்டின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டுள்ளதோடு, இலங்கை பொறியியல் படைப்பிரிவில் கேர்ணல் கட்டளை அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார்.
ஜெனரல் த சில்வா எல். ரி. ரி. ஈ பயங்கரவாதிகளிடமிருந்து தாய்நாட்டை காப்பாற்றுவதற்கான மனிதாபிமான படை முன்னெடுப்பில் மேற்கொண்ட சேவைக்காக வேண்டி வழங்கப்படும். “ரண விக்ரம்” பதக்கம் (ஆர்.டபிள்யூ.பி)இ உன்னத சேவைக்காக வழங்கப்படும்; “உத்தம சேவா” (யூஎஸ்பி) பதக்கம் மற்றும் சிறப்பான சேவைக்காக வழங்கப்படும் “விஸிஷ்ட சேவா விபூஷண” (வீ.எஸ்.வீ) பதக்கத்தையூம் பெற்றுள்ளார்.
ஜெனரல் த சில்வா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு பயிற்சிநெறிகளில் பங்குபற்றியுள்ளார். அவர் தனது முதலாவது பயிற்சிநெறியாக பாகிஸ்தானின் ரிசால்பார் இராணுவ பொறியியல் கல்லூரியில் இளம் அதிகாரிகளுக்கான பயிற்சிநெறியில் பங்குபற்றியுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியிலும் சீனாவின் நெங்ஜின் உயர் கல்லூரியிலும் பட்டம் பெற்றுள்ள ஜெனரல் த சில்வா இந்துனேஷியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு சமமான தேசிய ரிசிலியன்ஸ் நிறுவனத்தில் பாதுகாப்பு கற்கைகள் தொடர்பில் பட்டப் பின் படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.
இது தவிர ஜெனரல் த சில்வா இந்தியாவின் ‘மோவ்’ யூத்த கல்லூரியில் உயர் கட்டளை பயிற்சிநெறியையும் இந்தியாவின் புனே இராணுவ பொறியியல் கல்லூரியில் குண்டு செயலிழப்பு தொடர்பான பயிற்சிநெறியையும் இந்தியாவின் புனை பொறியியல் அதிகாரிகளுக்கான போர் பொறியியல் ஆலோசனை பயிற்சிநெறியையும் இந்தியாவின் புனே பொறியியல் கல்லூரியில் நில அகழ்வு நிலப் பராமரிப்பு மற்றும் கட்டிட நிர்மாண பயிற்சிநெறியையும் பாகிஸ்தானின் ரிசால்பூர் இராணுவ பொறியியல் கல்லூரியில் பொறியியல் குழு பொறுப்பதிகாரி பயிற்சிநெறியையூம் ஐக்கிய அமெரிக்காவில் ஹவாய் நகரில் ஆசிய பசுபிக் பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தில் உயர் நிறைவேற்று பாதுகாப்பு ஒருங்கினைப்பு பயிற்சிநெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் மதிப்பிற்குறிய பழைய மாணவர்கிள் ஒருவரான ஜெனரல் த சில்வா இராணுவத்தினுள் “கிரிஷாந்த” எனும் பெயரில் பிரபலமிக்க ஒருவராவார். அத்துடன் இவர் நயனா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட இவர் இரண்டு பிள்ளைகளின் அன்புத் தந்தையாக திகழ்கின்றார்.
Sports Shoes | New Releases Nike