Header

Sri Lanka Army

Defender of the Nation

14th June 2017 16:40:57 Hours

ஓய்வுபெற தயாராக இருக்கும் பாதுகாப்பு படையின் பதவிநிலை பிரதாணி இராணுவ தளபதியை சந்திப்பு

தமது சேவையிலிருந்து ஓய்வுபெற தயாராகும் பாதுகாப்பு படையின் பதவிநிலை பிரதானியான எயார் சீப் மார்சல் கோலிதகுணதிலகஅவர்கள் புதன்கிழமை (14) காலைவேளை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களை இராணுவத் தலைமையத்தில் சந்தித்தார்.

இத் தலைமையத்தின் கட்டளை அதிகாரியான லெப்டினன் ஜெனரல் அணில் சோமவீர அவர்களினால் இப் பதவிநிலை பிரதானி வரவேற்கப்பட்டதோடு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவ செயலாளர் காரியாலயத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு படையின் பதவி நிலைப் பிரதானியவர்கள் இராணுவத் தளபதியினால் மிக விமரிசையாக வரவேற்கப்பட்டதோடு இந்த நிகழ்விற்கு இராணுவ பதவிநிலை பிரதானி, பிரதி பதவிநிலை பிரதானி, நிறைவேற்று அதிகாரிகள் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு படையின் பதவிநிலை பிரதானி போன்ரோரிற்கிடையிலான சந்திப்பின் போது தமது சேவையினை மேற்கொண்டவிதம் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம் பெற்றதோடு இராணுவத் தளபதியினால் இந்த அதிகாரியின் சேவையினைபோற்றி நினைவூச் சின்னம் வழங்கப்பட்டதுடன் தமது மனமார்ந்த வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

மேலும் விசேட அதிதிகளுக்கான புத்தகத்தில் இவரது எண்ணக் கருத்து எழுதப்பட்டமை முக்கிய விடயமாகும்.

Adidas footwear | balerínky