Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2017 09:53:07 Hours

இராணுவத்தினர் தொடர்ந்தும் அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 58 ஆவது படைப் பிரிவு தலைமையகம் இணைந்து வெள்ளம் மற்றும் மண்சரிவில் விபத்திற்கு உள்ளாகி மரணமடைந்தவர்களை நினைவுபடுத்தும் முகமாக பௌத்தமத சடங்கு கிரிகைகள் மொரவககீர்தி அபேவிக்ரம மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

581 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 3 ஆவது (தொண்டர்) ஹெமுனு ஹேவா படையணியினால் பேரனர்த்த விபத்தில் காலஞ்சென்ற நபர்களது உறவினர்களை இப் பாடசாலைக்கு அழைத்து இந்த சம்பிரதாய சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்விற்கு 58 ஆவது படைத் தளபதி, 581 ஆவது கட்டளை அதிகாரி, 3 ஆவது ஹெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியும் கலந்துகொண்டனர்.

காங்கேசன் துரையிலிருந்து புகையிரதத்தின் மூலம் அன்பளிப்பாளர்களினால் கொண்டுவரப்பட்ட மெத்தைகள், தலைய​னை, பாய், தும்புத்தடி ,பாத்திரங்கள், சேலைகள், பாடசாலை உபகரணங்கள் இராணுவ வழி நடத்தலின் கீழ் பிடுபெத்த சேனாநாயக மஹாவித்தியாலய வளாகத்தினுள் பேரனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாயிருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இப் பாடசாலைக் கட்டிடதொகுதிகள் இராணுவத்தினரால் சுத்திகரிக்கப்பட்டு இப் பிரதேசமக்களுக்கு இராணுவ வைத்தியசேவையும் வழங்கப்பட்டது.

கினிதும மல்லிகா நவோதயா வித்தியாலாய நிர்வாகத்தினால்; 58 ஆவது படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய 16 (தொண்டர்) ஹெமுனு ஹேவா படையினரால் (11) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இந்த பாடசாலை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, 142 ஆவது படைத் தலைமையகம், 581, 583 ஆவது படைத் தலைமையகம் ,கடற்படையினர் இணைந்து கொழும்பு,கம்பஹ,மாத்தறை,களுத்துறை,கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பேரனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு தேவையான சேவைகளும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் தலைமையில் இராணுவ மருத்துவ படையணியின் வைத்திய சேவைகளும், இராணுவ அனர்த்த வாகனங்களை கொண்டு மீட்பு பணிகளும் இடம்பெற்றது.

jordan Sneakers | Womens Shoes Footwear & Shoes Online