Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2017 11:18:58 Hours

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்தபணிகளில் ஈடுபாடு

பேரனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான மாத்தறை, காலி, கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் உள்ளபொதுமக்களது கிணறுகளை நீர் இறைக்கும் இயந்திரங்களை கொண்டு சுத்திகரிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

581 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 5 (தொண்டர்) இலங்கை இராணுவ பொது சேவை படையணி, 3 , 16 (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி இணைந்து நெலும் பிரதேச செயலகத்தில் அனர்த்தத்தில் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு கிணறுகளை சுத்திகரிக்கும் பணிகளிலும் , உணவுவகைகளை விநியோகம் செய்யும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

583 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 8 ஆவது கெமுனு ஹேவாபடையணி , 5 ஆவது சமிக்ஞை படையணி , இராணுவ மருத்துவ படையணி , இலங்கை மின்சார பொறிமுறை படையணி , இராணுவ சேவைப் படையணி மற்றும் பொறியியலாளர் சேவைபடையணி இணைந்து இரத்தினபுரி , குருவிட , அயகம, கதன்ஹொட மற்றும் கலவான பிரதேசசெயலக பிரிவில் அனர்த்தத்தில் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு கிணறு சுத்திகரிக்கும் பணிகளிலும், உணவு வகைகளை விநியோகம் செய்யும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவ மருத்துவ படையணியினரால் பாஹியங்கல , புளத்சிங்கள , குகுலேகங்க ,கலவான , யடியன ,பூசா மற்றும் கஹதுவ பிரதேசத்தில் அனர்த்தத்தில் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு வைத்திய சேவை வழங்கப்பட்டது.

இராணுவத்தினர் வெள்ளிக் கிழமை (09) ஆம் திகதிபடகு ,யூனி பபல் , தண்ணீர் பவுசர் அம்பிலன்ஸ் ,பீ.டி.ஆர் , அயன் கோஸ் நீரி யந்திர வாகனங்களை கொண்டு இந்த அனர்த்த பணிகளை மேற்கொண்டனர்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் ஆலோசனைக்கு அமைய மேற்கு பாதுகாப்பபடைத் தலைமையகம், 142 ஆவது படைத் தலைமையகம், 581 ஆவது படைத் தலைமையகம், 582 ஆவது படைத் தலைமையகம், 583 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இந்த அனர்த்த பணிகள் இடம்பெற்றது.

bridgemedia | AIR MAX PLUS