Header

Sri Lanka Army

Defender of the Nation

10th June 2017 10:50:11 Hours

பொசன் பண்டிகையை முன்னிட்டு இராணுவத்தினரால் பல்வேறுபட்ட பௌத்த நிகழ்வுகள்

இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் இடம் பெறும் பொசன் பண்டிகையை முன்னிட்டு இராணுவத்தினர் அன்னதானம் போதி பூஜை,பொசன் வலய கண்காட்சிகள் புத்தபெருமானின் புனிததந்த வழிபாட்டு கண்காட்சிகள் போன்ற பௌத்த நிகழ்வுகளில் இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும், 551, 552, 553 ஆவது,படைப் பிரிவினால் நேற்றைய பொசன் தினத்தன்று அன்னதானம் வழங்கலும் அதேதினம் 51 ஆவது படைப் பிரிவினால் நாகதீப விகாரையில் போதிபூஜையும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பொசன்வலயம் அலங்கரிக்கப்பட்டு பௌத்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 21 ஆவது படைப் பிரிவினால் அநுராதபுரம் நகரத்தில் பொசன் வலயம் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் வேண்டுகோளுக்கு அமைய தந்திரிமலை விகாரையில் இடம்பெற்ற வெளிச்ச பூஜையின் நிமித்தம் கலந்து கொள்வதற்காக 38 பௌத்த தேரர்களுக்கு இராணுவத்தினரால் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66, 57 ஆவது படைப் பிரிவு இணைந்து கிளிநொச்சி , பூநகிரி பிரதேசத்தில் பொசன் வலயம் அமைத்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59, 64, 68, 681 படைப் பிரிவுகள் இணைந்து கொக்கிலாய் ,ஒட்டுசுட்டான் ,முதியன்கட்டு ,வெள்ளமுல்லி வாய்க்கால் ,புதுகுடியிருப்பு பிரதேசங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்புபடைத் தலைமையகத்தினால் 40 வர்ண் கூடுகள் அலங்கரிக்கப்பட்டு பொசன் வலயம் அமைக்கப்பட்டதுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

23 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் ஜூன் மாதம் 10ஆம் திகதி கல்குடாவில் உள்ள லாயா வேவ் ஹோட்டல் இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் சிங்கப்பூர் மஹா கருணா பௌத்த சமூக அமைப்பினால் பொசன் தினத்தையிட்டு புனானை, புன்னக்குடா, மொனரத்தென்ன, அசேலபுர, கடவத்மடுவ பிரதேச கிராம வறிய குடும்ப நபர்கள் 140 பேர் உட்பட 225 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்புபடைத் தலைமையக படையினரால் நிர்மானிக்கப்பட்ட பொசன் வர்ண கூடுகள் தங்கலை ,பொலன்னறுவை, பிங்கிரிய,மஙுரகம, திருகோணமலை, தொம்பை, ருவன்வெல்ல மற்றும் கதிர்காமம் பிரதேசங்களில் பொசன் வலயங்கள் கண்காட்சியிடப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைத் தலைமையகம்ப, டைப் பிரிவுகள், படையணிகள் இணைந்து ஹம்பந்தோட்டை , கண்டி பிரதேசங்களில் பொசன் பண்டிகை நிகழ்வுகளை ஓழுங்கு செய்தனர்.

latest Nike Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp