Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2017 16:34:16 Hours

அமெரிக்காவின் பசுபிக் கட்டளை (MCIP) கருத்தரங்கு ஆரம்பம்

பாதுகாப்பு அமைச்சு இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா பசுபிக் இணைந்து(USPACOM) நடாத்தும் ‘Multinational Communication Interoperability Programme’ (MCIP), எனும் கருத்தரங்கு 3ஆவது முறையாக 17 நாடுகளை முன்னிலைப்படுத்தி 39 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களான 50 அதிகாரிகளின் பங்கேற்புடன் மே மாதம் (29) ஆம் திகதி முதல் யூன் மாதம் (02)ஆம் திகதி வரை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும்.

மேற்படி கருத்தரங்கானது கடந்த திங்கட் கிழமையன்று (29) இலங்கை சமிக்ஞை படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க, கேணல் ஜேம்ஸ் மக் கலிஸ்டர், மெலனி வொசர் அம்மனி போன்ற உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம் பெற்றதுடன் லெப்டினண் கேணல் அசோக குணசேகர, லெப்டினண் கேணல் தம்மிக விதானரால, மெசஸ் டொம் கிராண்ட, எரிக் அண்டசன் போன்றௌர் உள்ளடங்களாக பல உயர் அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இக் கருத்தரங்கின் மூலமாக ஆசியாவின் பசுபிக் பிராந்திய நாடுகளிடையே சர்வதேச ஒருங்கிணைப்பு, தொடர்பாடல் ஒருங்கிணைப்பு ,ஒத்துழைப்பினை நிலைநாட்டல் , அவசர தேவையின் போது மனிதாபிமான நிவாரணங்கள் மற்றும் அனர்த்த நிவாரண பணிகள் தொடர்பான விசேட கண்காணிப்பு பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

Running sports | Nike sneakers