Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2017 16:36:45 Hours

இராணுவத்தினர் அனர்த்தங்களுக்கு உள்ளான பிரதேச பிரதான பாதைகளை சுத்திகரிக்கும் பணிகளில்

இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் மே மாதம் 29 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களின் பிரதான பாதைகளை சுத்திகரிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவ தளபதியின் விஜயத்தின் போது கலவான–அஹலவத்த- ரத்தினபுரி பாதை, அயகம–கவரகிரிய பாதை மற்றும் நிவிதிகல பிரதேசத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பிரதான வீதி சுத்திகரிப்புகளை பார்வையிட்டதுடன் பேரழிவுக்கு உள்ளான சிவிலியன்களது குறைபாடுகள் சம்பந்தமாகவும் பார்வையிட்டார்.

12 ஆவது பொறியியலாளர் படையணியினரால் இராணுவ நவீன இயந்திரங்களை பயண்படுத்தி கலவான–அகலவத்த - இரத்தினபுரி பிரதான பாதை அனர்த்தத்தின் நிமித்தம் பாதிப்புக்கு உள்ளான 500 அடி பாதைகளை சுத்திகரித்து பாதைகளை சீராக்கி பதுவத்த மங்சந்தி மற்றும் அம்பலன்பிடிய கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள எகெலியஹொட–தெஹியோவிட பாதைகளையும் ;சுத்திகரித்து சீராக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

5 ஆவது பொறியியலாளர் படையணி மற்றும் 583 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரால் காற்றிற்கு விழுந்த மரங்கள், பாரிய கற்கள் மற்றும் பாரிய பொருட்களை வீதிகளிலிருந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த அகற்றும் பணிகள் இந்த படையினர்களால் 9 மணித்தியாலயங்கள் மேற்கொண்டு அயகம–கவரகிரிய பாதைகளின் போக்குவரத்துக்கள் வழமை போல் சீராக்கப்பட்டுள்ளது.

பொறியியலாளர் படையணியின் பிரதானி மேஜர் ஜெனரல் தனஞ்ஜய கருணாரத்ன, 583 ஆவதுபடைப் பிரிவின் படைத் தளபதி, 5, 12 ஆவது பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

Running sport media | Air Jordan