Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2017 16:22:54 Hours

பேனர்த்தங்களின் போது பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மேலும் உதவும் நடவடிக்கைகளில்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 141 மற்றும் 142 ஆவது படைத் தலைமையகம், 581, 582 படைத் தலைமையகம் , பயிற்சி மத்திய நிலையம், கடற்படை மற்றும் விமானப்படை படையினர்கள் இணைந்து வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களான களுத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

58 ஆவது படைப் பிரிவு மற்றும் 14 ஆவது படைப் பிரிவிற்கு உரிய படையணியினர் கலவான, நாஹொட, பத்தேகம, அகுருஸ்ஸ, மாத்தறை, மொரவக பிரதேசங்களில் 23 போட்டுக்கள்,13 பீ.டி.ஆர் வாகனங்கள் மற்றும் 18 WMZ மீட்பு வாகனங்கள் , 18 பவல் வாகனங்கள் 12 ஐயன்கோஸ் வாகனங்களை ஈடுபடுத்தி இந்த அனர்த்த பணிகளை மேற்கொண்டனர்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் மேற்பார்வையில் கவச வாகன படையணி , பொறியியலாளர் படையணி, யந்திரவியல் காலாட் படை , கொமாண்டோ படையணி, விஷேட படையணி, எயார் மொபியில் படையணி மற்றும் பீரங்கிப் படையணிகள் இணைந்து 31 ஆம் திகதி புதன் கிழமை இந்த பணிகளை மேற்கொண்டனர்.

பொறியியலாளர் படையணியின் பிரதானியின் கட்டளையின் கீழ் இந்த படையணிகள் இந்த அனர்த்தம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நான்கு நாட்கள் தொடர்ந்து பொறியியலாளர் படையணி மாத்தறை, அகுரஸ்ஸ, பத்தேகம, தவலம, மாபலகம, களுத்தறை, கடுவெல, எஹெலியஹொட, நிவிதிகல, பதுரலிய, தும்மோதர, அகலவத்த, புளத்சிங்கள, காலியிலிருந்து தெனியாய பாதைகள், மொரவன, கொடபொல பிரதேசங்களில் சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் 31 ஆம் திகதி மாலை பாதுகாப்பு பிரதானி அலுவலகத்தினால் 46,000 உணவு பார்சல்கள், 4,995 உணவுப் பொதிகள், 6,370 தண்ணீர் போத்தல்கள், 1,200 தளகாணிகள் ,பாதிப்புக்கு உள்ளான 27 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது அத்துடன் இராணுவத்தினரால் 10000 உணவு பார்சல்கள் மற்றும் 1,500 தண்ணீர் போத்தல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Sports Shoes | Nike Shoes