Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2017 13:55:21 Hours

காலநிலை மாற்றத்தினால் ஏற்படுகின்ற அனர்த்த மீட்புப் பணிகளில் இரானுவத்தினரின் இடை விடா ஈடுபாடு

இரானுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் கண்காணிப்பின் கீழ் அன்மைக் காலங்களில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களான வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளிற்காக நுாற்றுக் கணக்கிலான படைவீரர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை(30) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த அன்மைக் காலத்தில் கிரிபத்தள பிரதேசமானது மண்சரிவினால் பாதிப்பிற்குள்ளான காரணத்தினால் கிட்டத்தட்ட மூன்று மடங்கிற்றும் அதிகமான வீடுகள் மற்றும் அதிகளவிலான மக்கள் இவ் அனர்த்தத்தினால் பாதிப்பிற்குள்ளானதுடன் இதன் மீட்புப் பணிகளுக்கென பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இவ் அனர்த்தத்தினால் பாதிப்புற்ற மக்களை தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் இக் காலநிலை மாற்றத்தினால் பாதிப்பிற்குள்ளான மாவதவத்த, பெல்லென, பொகவத்தலாவ மற்றும் புலத்சிங்கள – அகலவத்த பிரதேசங்களின் போக்குவரத்து வீதிகள் பாதிப்பிற்குள்ளானதுடன் பகியங்கள , திப்பொட்ட மற்றும் வீரகெட்டிய போன்ற பிரதேசங்கள் அதிக வெள்ள நீர்த் தேக்கத்தினால் பாதிப்பிற்குள்ளானதன் நிமித்தம் மீட்டுப் பணிகளுக்கென இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவப் படையணிகளான9ஆவது கெமுனு ஹேவா படையணி, 4ஆவது பொறியியளார் படையணி, 12ஆவது படைத் தலைமையகம், 582ஆவது படைப் பிரிவூ, 4ஆவது இலங்கை பொறியியளார் படையணி மற்றும் 5ஆவது இலங்கை சமிஞ்சை படையணி போன்றவற்றின் படையினர் இவ் மீட்புப் பணிகளில் பாரிய இயந்திர சேவையினை வழங்கியூள்ளதுடன் மேலும் 58 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 581 ஆவது படைப் பிரிவின் படை வீரர்கள் கடந்த இரண்டு தினங்களாக பத்தேகம பிரதேசத்தில் காணப்படுகின்ற வெள்ள நீர்ப் பெருக்த்தின் கட்டுப்பாட்டிற்காக கிங்கங்க பிரதேசத்திலிருந்து மண்மூட்டைகளை வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கலுத்தர மாவட்டத்தில் அத்வெல்தொட, அகலவத்த, பதுரலிய, பகியங்கல, யடிகம்பிடிய, மற்றும் புலத்சிங்கள போன்ற பிரதேசங்கிளல் மீட்புப் பணிகளுக்கான மிக பாரிய ஒத்துழைப்பினை 9ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 12 ஆவது இலங்கை சிங்கப் படையணியினர் வழங்கியூள்ளதுடன் மாபலக மரணவிரு பிரசேதத்தினைச் சேர்ந்தவர்கள் வெள்ள நீர் அனர்த்தத்தினால் பாதிப்பிற்குள்ளானதன் நிமித்தம் அவர்களது தேவையினைக் கருத்திற் கொண்டு 58ஆவது படைத் தலைமையம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க சிவில் தொடர்பாடல் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் பிரியந்த நாபாகொட அவர்களின் ஒருங்கிணைப்புடன் ஓர் உலர் உணவூப் பொதியானது ருபா 1500பெறுமதியானதாக காணப்படுவதுடன் சுமார் 100 உலர் உணவுப் பொதிகள்; கடந்த செவ்வாயக் கிழமை(30) காலை வேளை வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் இப் பொதிகளில் அரிசி், சீனி, பருப்பு, நுாடில்ஸ், பிஸ்கட் மற்றும் குடிநீர் போத்தல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் 58ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து உள்ளடங்களான இப் படைத் தலைமையத்தின் படையினர் தமது சொந்த பணத்தினை செலவிட்டு சுமார் 1000 உணவுப் பொதிகளை ஒழுங்கமைத்து கடந்த திங்கட் கிழமை(29) காலை உணவாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற அகலிய, திவிதுர மற்றும் உணன்விடிய போன்ற பிரதேசத்தினைச் சேர்ந்த மக்களிற்கு பகிர்ந்தளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இவ் அணர்த்தத்தினால் மரணித்த நபர்களின் இறுதிக் கிரியை சடங்கிற்கான முழு ஒத்துழைப்பினையும் இப் படையினர் வழங்கிவைத்துள்ளமை மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

jordan Sneakers | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp