Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2017 10:43:00 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இராணுவம் மற்றும் சிவிலியன்கள் இடையில் கரப்பந்தாட்டபோட்டிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் பாதுகாப்புபடைத் தலைமையக வருடாந்த கரப்பாந்தாட்ட போட்டிகளில் இராணுவத்தின் 35 குழுக்களும் சிவில் விளையாட்டு கழகத்தின் 2 குழுக்களின் பங்களிப்புடன் மே மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை மாங்குளம் கரப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

இராணுவ அணியின் இறுதிப் போட்டியில் 3 ஆவது கஜபா படையணி, 24 ஆவது கெமுனுஹேவா படையணியை தோற்கடித்து வெற்றியினை தழுவியுள்ளனர். மேலும் சிவில் குழுக்களுக்கு இடையிலான இறுதி போட்டியில் மாங்குளம் மின்னொலி விளையாட்டு கழகம் முழங்காவில் விநாயகர் விளையாட்டு கழகத்தை தோற்கடித்து வெற்றியினை தழுவினார்கள்.

இராணுவ அணியில் சிறந்தகரப்பந்தாட்ட வீரர்களான 3 ஆவது கஜபா படையணியின் லான்ஸ் கோப்ரல் லக்மால்சாஜன் மெதவத்தமற்றும் 24 ஆவது கெமுனுஹேவா படையணியின் சாதாரதன போர் வீரர் சஞ்ஜீவயும் சிவில் குழுவில் சிறந்த கரப்பந்தாட்ட வீரர்களாக முழங்காவில் விநாயகர் விளையாட்டு கழகத்தின் ராஜேந்திரன்ஆரோக்கிய அந்தனியும் மாங்குள விளையாட்டு கழகத்தின் சஜேன்கொச் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொது மக்கள் மற்றும இராணுவத்திற்கு இடையில் சிறந்த நல்லினக்கத்தை மேன்படுத்தும் நோக்கத்துடன் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் 574 ஆவது படைத் தளபதியின் இணைப்புடன் இந்த விளையாட்டு போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியினால் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Adidas footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp