Header

Sri Lanka Army

Defender of the Nation

29th May 2017 14:41:44 Hours

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இயற்கை அனர்த்தம் சம்பந்தமான செயலமர்வு

யாழ்ப்பாண பாதுகாப்புபடைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் ஆலோசனைக்கு அமைய யாழ் குடா நாட்டில் சேவை புரியும் முப்படையினருக்கு அவசர அனர்த்தத்தின் போது முகம் கொடுத்தல் சம்பந்தமான கருத்தரங்கு மே மாதம் 25, 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வெள்ளம் மற்றும் வரட்சி நிலவும் காலங்களில் அதற்கு முகமளிப்பது சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், சுகாதார அமைச்சு, காலநிலை வளி மண்டல திணைக்களம், தேசிய கட்டிட மீளாய்வு திணைக்களம் இணைந்து இந்த பணிப்பக விரிவுரையாளர்களினால் நடாத்தப்பட்டது. இந்த கருத்தரங்கிற்கு இராணுவத்தில் 250 பேரும், முப்படையின் 330 பேரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கருத்தரங்கு 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஹெட்டியாரச்சியின் தலைமையில் இடம்பெற்றது.

trace affiliate link | FASHION NEWS