Header

Sri Lanka Army

Defender of the Nation

25th May 2017 14:18:13 Hours

இராணுவத்தின் பதவி நிலை பிரதானி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற பயிற்சிப் பட்டறை

புத்தளப் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில்(OCDC) “மாறும் பாதுகாப்பு நிலைமைகளின் போது இராணுவ முகமளிப்பு”(Changing Security Landscape: Role of Sri Lankan Forces) எனும் தலைப்பின் கீழ் இந்தபயிற்சிப் பட்டரையானது கடந்த திங்கட்கிழமை (24) திகதி காலைவேளை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு இந்த நிகழ்வில்; தலைமை உரையும் இவ் அதிகாரி அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

மேலும் இப் பயிற்சிப் பட்டறையானது; இராணுவ மற்றும் சிவில் வித்துவான்களின் பங்களிப்புடன் ‘Existing & Emerging Threats to Peace & Stability’, ‘Sensitization & Exploitation of Religious, Ethnic & Political Issues’, ‘Technological Advancement, Dependence & Potential Threats’, ‘Geo-political Interests & the World Order’ and ‘Challenges to Sri Lankan Armed Forces in Countering Future Threats’ இங்கு உள்ளடக்கப்பட்டுள்ள தலைப்புக்களை மையப்படுத்தியவாறு இப் பயிற்சிப் பட்டறை நிகழ்த்தப்பட்டதுடன் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்திணைச சேர்ந்த 60 உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் ஆரம்ப வைபவமாக மங்கள விளக்கேற்றல் இடம் பெற்றதோடு பிரதான அதிதியாக இராணுவ பதவி நிலை பிரதானி உள்ளடங்களாக பல அதிதிகள் கலந்து கொண்டதுடன் இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சந்தன குணவர்தன அவர்களினால் இந்த நிகழ்விற்கு அங்கம் வகித்தவர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர்.

முதல் நாள் பயிற்சிப் பட்டறை அமர்வில் மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா, பிரிகேடியர் சீ.எஸ்.என் முதன்நாயக (Retd), திரு நிஷான் டி மெல், திரு லசந்த விக்கிரம சூரிய, கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து மற்றும் பேராசிரியர் இம்தியாஸ் அஹமட் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாள் பயிற்சிப் பட்டறை அமர்வில் பேராசிரியர் சாந்த கே ஹேன்நாயக, திரு அஷாந்த செனவிரத்தின, திருசனத் டி சில்வா, மேஜர் ஜெனரல் கேபி ஏ ஜயசேகர, பிஎச் எம் ஏ விஜேசிங்க, பிரிகேடியர் ஜி விரவிப்பிரிய, பிரிகேடியர் எம் டி யூ விகுணதிலக, கேணல் குலதுங்க மற்றும் லெப்டினன் கேணல் கே வி பி தம்மிக போன்றௌர் கலந்து கொண்டனர்.

இவ் பயிற்சிப் பட்டறையின் முதல் நாள் அமர்வு முடிவில் இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின கட்டளை தளபதி அவர்களினால் இராணுவ பதவி நிலை பிரதானி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

Sport media | Air Jordan Release Dates 2020