Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd May 2017 08:54:46 Hours

ஆடைத் தொழிற்சாலை பயிற்சி நிலையம் முல்லைத்தீவு பிரதேசத்தில்

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் குலோபல் டிசயின் டெக்ஸ் நிறுவனம் இணைந்து முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகள் 35 பேர்களை தேர்ந்தெடுத்து இந்த ஆடைத் தொழிற்சாலை சம்பந்தமான பயிற்சிகளை வழங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 2017 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இந்த ஆடைப் பயிற்சிகள் ஆரம்பமாகி இந்த பயிற்சி காலப் பகுதியில் பயிற்சியாளர்களுக்கு சம்பளமாக 14000 ரூபாயும் வழங்கி உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த பயிற்சி ஆரம்ப நிகழ்விற்கு முல்லைத்தீவு மாவாட்ட செயலாளர் ரூபாவதி கேதிஸ்வரி அம்மையார், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து, மெரிடயிம்பத்து பிரதேச செயலாளர் குணபாலன் அவர்கள் மற்றும் குலோபல் டிசயின் டெக்ஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சம்பத் மதுரசிங்க கலந்து சிறப்பித்தனர்.

jordan release date | Air Jordan