Header

Sri Lanka Army

Defender of the Nation

20th May 2017 08:27:40 Hours

கொழும்பு தாமரை தடாகத்தில் மிக விமரிசையாக இடம் பெற்ற இராணுவ வெசாக் பக்திகீத நிகழ்வுகள்

இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ சேவா வனிதாவின் தலைவி நயனா த சில்வாவின் பங்களிப்புடன சர்வதேச வெசாக் நிகழ்வினை முன்னிட்டு வெசாக் பக்திப்பாடல்கள் உள்ளடங்களாக மேலும் பல விசேட நிகழ்வுகள் நேற்றைய தினமான செவ்வாயக்கிழமை(16) ஆம் திகதி தாமரை தடாக திரையரங்கில் மிக விமரிசையாக இடம் பெற்றது.

மேலும் இந்த வெசாக் நிகழ்வில் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் காரியாலயத்தின் கண்காணிப்பின் கீழ் பேன்ட் வாத்தியக் குழுவினர் மற்றும் நாடகக் கலை பணிப்பாளர் சங்கத்தினால் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றதோடு 150 நாடகக் கலைஞர்கள் 40 பேர் கொண்ட பாடகர் குழுவினர் மற்றும் 40 பேர் உள்ளடங்களான வாத்தியக்குழுவினரின் இன்னிசையும் இந்த நிகழ்வை மெருகூட்டியது.

அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வில் பௌத்த மதத்தினை அடிப்படையாகக் கொண்ட பல புராணக் கதைகள் விவரிக்கப்பட்டதோடு இராணுவகலை கலாச்சார குழுவினர் மற்றும் இசைக் குழுவினரால் அவர்களது பல கலை வெளிப்பாடுகள் இந் நிகழ்வில் ஓர் முக்கியம்சம் வகித்தது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ அபேகோண் கலந்து கொண்டதுடன் சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகளின் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் ஜீ விஜேவீர,பாதுகாப்பு செயளாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி .பாதுகாப்பு பதவி நிலை அதிகாரி எயார் சீப் மார்சல் கோலித குணதிலக,விமானப் படைத்தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முப்படைகள் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

buy shoes | Patike