Header

Sri Lanka Army

Defender of the Nation

17th May 2017 11:05:56 Hours

வடமாகாணத்தில் ரணவிரு நினைவு தின நிகழ்வு

ரணவிரு நினைவு மாதத்தினை முன் வைத்து வடமாகாண ரணவிரு நினைவு தின விழா 08 ஆம் திகதி திங்கட்கிழமை பலாலியில் அமைந்துள்ள ரணவிரு நினைவு துாபி வளாகத்தினுள் ஆளுனர் அலுவலகம் மற்றும் ரணவிரு சேவை அதிகாரி சபை இணைந்து நடத்தியது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்கள் வருகை தந்தார். அதன் பின்பு தேசிய கீதம் இசைத்து இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களினை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அங்சலி செலுத்தி இந்த நினைவு துாபிகளுக்கு மலர்களையும் சூட்டி ஆளுனர் கௌரவத்தை தெரிவித்தார். அதன் பின்பு அனைத்து சமய தலைவர்களினதும் ஆசிர்வாத சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. பின்பு வடமாகாண பிரதான செயலாளர் ஏ. பதிநாதன் அவர்கள் வரவேற்புரையை ஆற்றினார். அதனை தொடர்ந்து ரணவிரு சேவை அதிகார சபையின் பணிப்பாளர்; நாயகம் டி. குமார ஸ்ரீ ஜயவர்தன அவர்களினால் இந்த நினைவு தினம் சம்பந்தமான விளக்கத்தை வழங்கினார். அதனை தொடர்ந்து யாழ்ப்பாண மாவாட்ட செயலாளர் என். வேதநாயகம் நன்றியுரையையும் ஆற்றினார்.

இந்த நிகழ்விற்கு யாழ்ப்பாண மாவாட்ட செயலாளர் என். வேதநாயகம்,கிளிநொச்சி மாவாட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் அம்மையார், கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச உயரதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

Nike sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov