Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2025 16:00:56 Hours

4 வது கெமுனு ஹேவா படையணியினால் நலன்புரித் திட்டம் ஏற்பாடு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 4 வது கெமுனு ஹேவா படையணி 2025 ஏப்ரல் 17 அன்று வாழைச்சேனை யோகர்சுவாமி இந்து மகளிர் இல்லத்தில் பாடசாலை பொருள் வழங்கும் நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து பிள்ளைகளுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த முயற்சிக்கான நிதியுதவியை லயன்ஸ் கழகம் வழங்கியது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.