Header

Sri Lanka Army

Defender of the Nation

15th April 2025 10:36:54 Hours

2025 படையணிகளுக்கிடையிலான செபக்டக்ரா சாம்பியன்ஷிப்பில் விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி வெற்றி

இராணுவ காற்பந்து குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2025 படையணிகளுக்கிடையிலான ஆண்கள் செபக்டக்ரா சாம்பியன்ஷிப் போட்டி 2025 மார்ச் 07 ஆம் திகதி பனாகொடை உள்ளக மைதானத்தில் 13 படையணிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தது. 13 படையணிகளின் அணிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான போட்டியின் பின்னர், விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி மற்றும் இலங்கை இராணுவ இராணுவ பொலிஸ் படையணியின் செபக்டக்ரா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விஜயபாகு காலாட் படையணியின் செபக்டக்ரா அணி 02 க்கு 00 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி இராணுவ காற்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெற்றிகரமாக நடைபெற்றது.