04th April 2025 22:13:49 Hours
தொழிலாண்மை விருத்தி மற்றும் தலைமைத்துவ புத்தாக்க பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2025 ஏப்ரல் 04 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வு ஒரு அறிமுக காணொளி விளக்கக்காட்சியுடன் ஆரம்பமாகியதுடன் இது பார்வையாளர்களுக்கு பாடநெறியின் நோக்கங்கள் மற்றும் இராணுவப் பயிற்சியில் தலைமைத்துவம் மற்றும் அணிநடை பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கியது. அதைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி, சிறப்பு விருந்தினர்களுடன் சான்றிதழ் வழங்கும் பிரிவில் கலந்து கொண்டதுடன் இதில் 123 பாடநெறி பங்கேற்பாளர்கள் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டனர். இந்தப் பாடநெறி அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் 2025 பெப்ரவரி 24 முதல் 2025 மார்ச் 25 வரை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய இராணுவத் தளபதி, பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களை வாழ்த்தி, இராணுவத்தில் தொடர்ச்சியான கற்றல் மற்றும் தொழில்முறை மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இராணுவ வீரர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தந்திரோபாய செயல்திறன் ஆகியவற்றின் உயர் தரங்களைப் பராமரிப்பதில் புத்தாக்கப் பாடநெறிகள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இலங்கை கவச வாகன படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி I பீ.சி. தெஹிகஸ்பிட்டிய யூஎஸ்பீ அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தேநீர் விருந்து நடைபெற்றது. பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதான பதவி நிலை அதிகாரிகள், அம்பாறை போர் பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி மற்றும் பிரதிநிதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.