Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2025 22:16:40 Hours

இராணுவ தளபதியை விமான படைத்தளபதி மரியாதை நிமித்தம் சந்திப்பு

புதிய விமானப்படைத் தளபதி, ஏயர் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூவீ ஆர்எஸ்பீ மற்றும் மூன்று பார்கள் யூஎஸ்பீ எப்என்டியூ (சீனா) பீஎஸ்சி கியூஎச்ஐ 2025 ஏப்ரல் 04 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

வருகையின் போது இராணுவ தலைமையக மைதானத்தில் இலங்கை பீரங்கி படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.

இராணுவத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் புதிய விமானப்படைத் தளபதியை வரவேற்ற இராணுவத் தளபதி, தனது முதன்மை பதவி நிலை அதிகாரிகளை பிரதம விருந்தினருக்கு அறிமுகப்படுத்தியதுடன் தொடர்ந்து ஒரு குழு படமும் எடுத்துக் கொண்டார்.

இராணுவத் தளபதியுடனான இந்த சந்திப்பின் போது, பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, இரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடினர்.

புதிய நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட இராணுவத் தளபதி வருகை தந்த விமானப்படைத் தளபதிக்கு நினைவுப் பரிசை வழங்கினார். வருகையை நிறைவு செய்து, விமானப்படைத் தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.