Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2025 15:02:10 Hours

இராணுவத் தளபதி ரணவிரு வள மையத்தில் தேசிய தொழிற் தகைமை நிலை 4 சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றல்

ரணவிரு வள மையத்தில் பல்வேறு தொழில்நுட்ப பாடநெறிகளை நிறைவு செய்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற் தகைமை நிலை 4 க்கு வெற்றிகரமாக தகுதி பெற்ற முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 30 பங்கேற்பாளர்களுக்கான இறுதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 04 ம் திகதி வத்தளை ரணவிரு வள மையத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந் நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க (ஓய்வு) ஆகியோருடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளிகள், மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.