Header

Sri Lanka Army

Defender of the Nation

30th March 2025 10:27:56 Hours

விஜயபாகு காலாட் படையணியின் 35 வது ஆண்டு நிறைவு

விஜயபாகு காலாட் படையணி தனது 35 வது ஆண்டு நிறைவினை போயகனையில் உள்ள படையணி தலைமையகத்தில் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 மார்ச் 22 அன்று கொண்டாடியது.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மல்லவப்பிட்டி முதியோர் இல்லம் மற்றும் மலியதேவ சிறுவர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு படையணி 2025 மார்ச் 15 அன்று சிறப்பு மதிய உணவை ஏற்பாடு செய்தது. சமூக சேவை முயற்சியாக, குருநாகல் போதனா மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் வார்டின் கூரையையும் படையினர் புதுப்பித்தனர்.

2025 மார்ச் 18-19 திகதிகளில் இரவு முழுவதும் 'பிரித்' பாராயணம் அதைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படையணிக்கு ஆசிர்வாதங்களையும், வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

ஆண்டு நிறைவு நாளில், படைத்தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் பின்னர் உயிர்நீத்த மாவீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன் அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கு சிறந்த பங்களிப்புகளையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயிற்சி பாடநெறிகளில் சிறந்து விளங்கியதற்காகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

படையினரிடையே நட்புறவை வளர்க்கும் வகையில், அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.