Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2025 06:53:56 Hours

இராணுவத் தளபதி ‘அபிமன்சல 3’ மருத்துவ முகாமுக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போர்வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் 2025 மார்ச் 28, அன்று பாங்கொல்லை அபிமன்சல 3 நல விடுதியின் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த முயற்சி குருநாகல் பகுதியில் உள்ள அங்கவீனமுற்ற முன்னாள் படைவீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

இராணுவத் தளபதியுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். வருகை தந்த பிரதம விருந்தினருக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய நுழைவாயிலில் வாகனம் தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், போர்வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூஎஎஸ்ஆர் விஜேதாச டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி மற்றும் ஏனைய சிறப்பு அதிதிகளை வரவேற்றார்.

பின்னர் இராணுவ தளபதி மருத்துவ முகாமைப் பார்வையிட்டதுடன் அதன் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடிய அவர் நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த மருத்துவ முகாம், குறிப்பாக செயற்கை உறுப்புகள் அல்லது அறுவை சிகிச்சை சாதனங்கள் தேவைப்படும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு அத்தியாவசிய ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்பது குறிப்பிடதக்கதாகும். சுமார் 1000 இராணுவ வீரர்கள் இந்த முகாமில் பயனடைந்தனர். சுகாதார ஆலோசனைகள், செயற்கை உறுப்பு பராமரிப்பு, மனநல ஆலோசனை மற்றும் தனிப்பட்ட போசாக்கு முறை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. தோல் மருத்துவம் மற்றும் பல் பராமரிப்புக்கான சிறப்பு மருத்துவ பிரிவுகளும் அமைக்கபட்டிருந்தன.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.