Header

Sri Lanka Army

Defender of the Nation

24th March 2025 09:22:22 Hours

இராணுவ புலனாய்வுப் படையினர், பருத்தித்துறை பொலிஸாருடன் இணைந்து, சுமார் ரூ.60 மில்லியன் பெறுமதியான கேரள பறிமுதல்

இராணுவ புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை தும்பளை முக்கம் கடலோரப் பிரதேசத்தில் பருத்தித்துறை பொலிஸாருடன் இணைந்து 2025 மார்ச் 22 ஆம் திகதி சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர். இதன் போது, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட சுமார் 350 கிலோகிராம் (154 பார்சல்கள்) கேரள கஞ்சா மற்றும் ஒரு படகும் கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.