20th March 2025 20:10:34 Hours
இலங்கை இராணுவம் தனது ஆறாவது இராணுவ கோட்பாடு வெளியீட்டை 2025 மார்ச் 20, அன்று இராணுவ தலைமையகத்தில் அறிமுகப்படுத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வருகை தந்த அதிதியை ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டிஎன் மஜீத் ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்றார்.
பின்னர், ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களால் புதிய கோட்பாட்டு வெளியீடுகளின் அடையாள விளக்கவுரை பிரதம அதிதிக்கு வழங்கப்பட்டது. போர் நடைமுறை - ஆங்கிலம், போர் நடைமுறை - சிங்களம், தரை ஒருகிணைப்பு - ஆங்கிலம், தரை ஒருங்கிணைப்பு - சிங்களம், கையேடு – சீஎஸ்எஸ் மதிப்பீடு, ஐஎஸ் மற்றும் சீஆர்டபிள்யூ - சிங்களம், எம்எசீஎ புத்தகம், மாதிரி சுருக்கம் மற்றும் வாய்மொழி ஆணைகள் - ஆங்கிலம், செயல்பாட்டு அறை மற்றும் பதிவு பராமரிப்பு ஏற்பாடு, நிலப்பரப்பு பகுப்பாய்வு - சிங்களம், மாதிரி சுருக்கம் மற்றும் வாய்மொழி கட்டளைகள் - சிங்களம் மற்றும் உளவு துண்டுப்பிரசுரம் நிலப்பரப்பு பகுப்பாய்வு - ஆங்கிலம் ஆகியவை வெளியீடுகளில் அடங்கும். இந்த சேர்த்தல்கள் இராணுவத்தில் கிடைக்கும் கோட்பாட்டு வளங்களை மேலும் வளப்படுத்துவதாகும்.
அதைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு கோட்பாட்டு பொதிகளை வழங்கினார், இது வெளியீடுகளின் அதிகாரப்பூர்வ வெளியீட்டைக் குறிக்கிறது. பரவலான அணுகலை உறுதி செய்வதற்காக, அனைத்து பொருட்களின் மின்னணு பிரதிகளும் இராணுவ ஈ-போர்டலில் பதிவேற்றப்பட்டன, இதனால் அமைப்பு முழுவதும் உள்ள பணியாளர்கள் புதுப்பிக்கப்பட்ட கோட்பாடுகளிலிருந்து பயனடைய முடியும்.
இராணுவ பதவி பிரதானி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.