Header

Sri Lanka Army

Defender of the Nation

17th March 2025 13:58:24 Hours

டாக்கா மாநாட்டில் காலநிலை பாதுகாப்பு தொடர்பாக கேணல் எம்.பி.பி.என் ஹேத் ஆர்.எஸ்.பீ அவர்களின் உரை

தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பதில் பணிப்பாளருமான (ஆராய்ச்சி) கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்.எஸ்.பீ அவர்கள் 2025 பெப்ரவரி 24 முதல் 25 வரை டாக்காவில் நடைபெற்ற "வறட்சி, வெள்ளம் மற்றும் தவறான வடிவமைப்பு தொடர்பாக தெற்காசியாவின் காலநிலை பாதுகாப்பு" மாநாட்டில் ஒரு விளக்கக்காட்சியை வழங்கினார். பங்காளாதேஷ் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் காலநிலை மாற்றம் மற்றும் பிராந்திய பாதுகாப்பை நிவர்த்தி செய்வதற்காக ஆறு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

"அமைதியை மேம்படுத்துதல்: தெற்காசியாவில் காலநிலை பாதுகாப்பிற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல்" என்ற தலைப்பில் கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்எஸ்பீ அவர்களின் விளக்கக்காட்சி, கலப்பு நிதி மாதிரிகள், காலநிலை பத்திரங்கள் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மைகள் உள்ளிட்ட காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நிதி உத்திகளில் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. எல்லை தாண்டிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லையமைப்புகள் மற்றும் பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்த ஒரு தெற்காசிய சக்தி அமைப்பு ஆகியவற்றின் சாத்தியக்கூறுகளையும் அவர் கலந்துரையாடினார். அதே நேரத்தில் அவர் நிதி, தொழில்நுட்ப மற்றும் அரசியல் தடைகளின் சவால்களையும் எடுத்துரைத்தார்.

எயர் வைஸ் மார்ஷல் மஹ்மூத் ஹுசைன், கலாநிதி சல்மா மாலிக் மற்றும் மேஜர் ஜெனரல் பினாஜ் பஸ்னியத் உள்ளிட்ட முக்கிய பேச்சாளர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு, தெற்காசியாவில் காலநிலை பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக உரையாற்றினர்.

(புகைப்படம்: பாதுகாப்பு அமைச்சு)