17th March 2025 11:57:17 Hours
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மார்ச் 12 அன்று 9 வது களப் பொறியியல் படையணிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், கட்டளை அதிகாரி மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், படையினருக்கு உரையாற்றிய அவர், தனிப்பட்ட மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு அவசியமான ஒழுக்கம், மீள்தன்மை மற்றும் நெறிமுறை நடத்தை ஆகியவற்றை வலியுறுத்தினார். சமச்சீரான உணவின் மூலம் உடல் ரீதியான தயார்நிலையின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். மேலும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு ஒரு முன்மாதிரியான 'தூய இலங்கை' திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வீரர்களை வலியுறுத்தினார்.
அலுவலகத்தின் செயல்பாட்டு நிலை தொடர்பான விளக்கத்துடன் விஜயம் நிறைவடைந்தது. பின்னர் அவர் அதிகாரிகள் உணவகத்தில் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.