Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2025 06:10:06 Hours

அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 59 நிறைவு

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 59 வெற்றிகரமாக 2025 மார்ச் 08 ஆம் திகதி நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.

போர் பயிற்சி பாடசாலையில் ஒரு மாதகால பாடநெறியில் தொண்ணூற்றொன்பது அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பங்குபற்றினர். 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் கேடிஎச் குமாரி இப்பாடநெறியின் சிறந்த மாணவி என்ற பட்டத்தைப் பெற்றார்.

சான்றிதழ் வழங்கும் விழாவில் போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூவீடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இறுதி உரையை நிகழ்த்தினார். போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி, பிரதம பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.