Header

Sri Lanka Army

Defender of the Nation

07th March 2025 18:49:53 Hours

சிரேஷ்ட அதிகாரியின் சிறந்த சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்திலிருந்து 33 வருட சிறப்புமிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் பீ. விதானகே அவர்கள் 2025 மார்ச் 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார்.

இச்சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதன்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு பணிக்காலம் முழுவதும் வழங்கி ஒத்துழைப்பினையும் இராணுவத் தளபதி பாராட்டினார். அவரது பணிக்காலம் முழுவதும் அவருக்கு ஆதரவளிப்பதில் அவரது குடும்பத்தினர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் பீ. விதானகே அவர்கள் 1991 நவம்பர் 17ம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி பாடநெறி 09 இல் நிரந்தர படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். அவர் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 1993 நவம்பர் 22 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன்னாக இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார்.

இராணுவத்தில் தனது சேவையின் போது அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட அவர் 2025 ஜனவரி 18 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். 2025 பெப்ரவரி 15 அன்று தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெற்றார். சிரேஷ்ட அதிகாரி ஓய்வு பெறும் போது, இராணுவ தலைமையகத்தில் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை இராணுவ டென்னிஸ் குழுவின் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

தனது பணிக்காலத்தில் வவுனியா உள்ளக பாதுகாப்பு குழுவின் குழுத்தளபதி, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பாடசாலையின் குழுத்தளபதி, பணிப் படை 1 இன் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி, 51 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தள பட்டறையின் கட்டளை அதிகாரி, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தள பட்டறை (உடவலவ) தள பட்டறை அதிகாரி, வவுனியா உள்ளக பாதுகாப்பு குழு கட்டளை அதிகாரி, 3 வது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி நிறைவேற்று அதிகாரி, 4 வது கவச வாகன மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் கள பட்டறை கட்டளை அதிகாரி, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் (கவச) பட்டாலியன் 2 ம் கட்டளை அதிகாரி, ஐக்கிய நாடுகளின் பல பரிமானம் ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணி மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி 2ம் கட்டளை அதிகாரி, 21 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 1, 3 வது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி கட்டளை அதிகாரி, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் (கவச) பட்டாலியன் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு பதவி நிலை நிலை பிரதானி காரியாலய பணிநிலை அதிகாரி 1 (வழங்கல்), மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தள பட்டறை (உடவலவ) தள பட்டறை தளபதி, 21 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிர்வாகம் மற்றும் வழங்கல்), பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி கேணல் (நிர்வாகம் மற்றும் வழங்கல்), மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் கேணல் (திட்டம்), தேசிய மாணவ சிப்பாய் படையணி தலைமையக பிரிகேடியர் (நிர்வாகம் மற்றும் வழங்கல்), யாழ்.பாதுகாப்பு படை தலைமையக பதில் வழங்கல் தளபதி மற்றும் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் இளம் அதிகாரிகள் பாடநெறி, கனிஷ்ட கட்டளை பாடநெறி, இந்தியாவில் அதிகாரிகளின் மேம்பட்ட இயந்திர பொறியியல் பாடநெறி, இந்தியாவில் பட்டறை நிறுவனத் தளபதிகள் பாடநெறி, இந்தியாவில் சிரேஷ்ட மின் மற்றும் இயந்திர பொறியியல் அதிகாரிகள் பாடநெறி மற்றும் இந்தியாவில் உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை முடித்துள்ளார்.