Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2025 13:52:21 Hours

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 242 வது காலாட் பிரிகேடினால் நிவாரணம்

பொத்துவில், பனாமா மற்றும் நீலகிரிய பிரதேசங்களில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்கு பதிலளிக்கும் விதமாக 242 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் கட்டளை படையலகுகள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டன.

2025 மார்ச் 3 அன்று 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.சி.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ மற்றும் 242 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கே.ஜி.ஏ.டி. கலகோரலே ஆர்எஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படையின் உதவியுடன் பனாமாவில் சுமார் 200 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மறுநாள் 2025 மார்ச் 4 ஆம் திகதி நீலகிரிய சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிக்கித் தவித்த சுமார் 1,000 பௌத்த பக்தர்களின் பயண தடையை நீக்க பிரிகேட் படையினர் விரைவாக உதவியதுடன், நிவாரணம் வழங்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.