05th March 2025 22:42:27 Hours
இராணுவத் தலைமையகத்தில் உள்ள ஆராய்ச்சி கருத்து மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பொதுப்பணிநிலை அதிகாரி II (இராணுவ உத்தி மற்றும் வலு) இராணுவ கவச வாகன படையணியின் மேஜர் ஏ.பி.எஸ்.யு. அபேசேகர பீஎஸ்சீ அவர்கள் 2025 மார்ச் 03 அன்று ஹொரணை, தக்ஷிலா மத்திய கல்லூரியின் 123 பாடசாலை மாணவ தலைவர்களுக்கான "கூட்டணி மற்றும் சமூக ஆசாரம்" குறித்த அறிவூட்டும் அமர்வை நடத்தினார். தக்ஷிலா நியமு திட்டம் - 2025 இன் கீழ் நடைபெற்ற இந்த அமர்வு, பாடசாலை அதிபர் மற்றும் மனிதவள மேம்பாட்டு பிரிவின் வேண்டுகோளின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தனது அமர்வின் போது, தொழில்முறை நடத்தை, தலைமைத்துவம் மற்றும் சமூக அந்தஸ்து குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், இளம் மாணவ தலைவர்கள் எதிர்காலத் தலைவர்களாக சிறந்து விளங்கத் தேவையான அத்தியாவசிய திறன்களை வழங்கினார். இராணுவ மூலோபாயம் மற்றும் ஒழுக்கத்தில் அவரது நிபுணத்துவம் ஒரு தனித்துவமான முன்னோக்கை வழங்கியதுடன் தொழில்முறை மற்றும் சமூக சூழல்களில் கட்டமைக்கப்பட்ட தலைமைத்துவம், பயனுள்ள தொடர்பு மற்றும் நெறிமுறை நடத்தை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
இந்த அமர்வில் மாணவர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபடவும், கேள்விகளை எழுப்பவும், பாடசாலை மாணவ தலைவர்களாக தங்கள் பாத்திரங்களுக்குப் பொருந்தக்கூடிய நடைமுறை அறிவுகளை பெறவும் அனுமதித்தது.
இந்த நிகழ்வு அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சின்னத்துடன் நிறைவடைந்ததுடன் இது அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஒரு வெற்றிகரமான மற்றும் வளமான அனுபவமாக அமைந்தது.
இவ்அமர்வில் பாடசாலை பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.