05th March 2025 22:43:03 Hours
தெஹிவளை, நெதிமாலையில் 2025 பெப்ரவரி 18 ஆம் திகதி அதிகாலையில் மேஜர் (வைத்தியர்) பீஜே ராமுக்கன அவர்களின் வீட்டிற்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, துணிச்சலும் மருத்துவ நிபுணத்துவமும் கொண்ட அவர் துணிச்சலான செயற்பாட்டை வெளிப்பட்டுத்தினார்.
இந்த தீ விபத்து ஒரு வயதானவர் மற்றும் அவரது மகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தது. மகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டன, இதன் விளைவாக புகை மற்றும் தீயில் சிக்குண்ட தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
கொழும்பு இராணுவ மருத்துவமனையில் மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற இராணுவ மருத்துவ அதிகாரி, தயக்கமின்றி சம்பவ இடத்திற்கு விரைந்தார். தீவிர சிகிச்சை மருத்துவத்தில் தனது விரிவான நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய அவர், உடனடியாக இதய மசாஜ் செய்து, வாய் வழி மூலம் புத்துயிர் அளித்தார். துணை மருத்துவர்கள் வருவதற்கு முன்பு முதியவரை வெற்றிகரமாக உயிர்ப்பித்தார். பின்னர் நோயாளி மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் கலுபோவில, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது விரைவான மற்றும் தீர்க்கமான தலையீடு பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதிலும் மேலும் பிரச்சினைகளைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது.
இந்த சம்பவம் அவசரநிலைகளில் உடனடி மருத்துவ நடவடிக்கையின் முக்கியத்துவத்தை மட்டுமல்லாமல், ஓய்வு நேரங்களிலும் சேவை செய்வதில் இராணுவ மருத்துவ நிபுணர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.