04th March 2025 14:00:16 Hours
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களின் அறிவுறுத்தல்களின் கீழ், பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆளணி நிர்வாக பணிப்பக பணிப்பாளரின் மேற்பார்வையுடன், இலங்கை இராணுவம் தற்போது படையணி சார்ஜன் மேஜர்கள் மற்றும் அணிநடை பயிற்றுவிப்பாளர்களுக்கான தொழில் முன்னேற்றம் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு பாடநெறி - 2025/01 ஐ அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடாத்தி வருகிறது.
இந்தப் பாடநெறி 2025 பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், 2025 மார்ச் 25 ஆம் திகதி வரை தொடரும். அணி நடைபயிற்றுவிப்பாளர் பாடநெறி திட்டமானது படையணி சார்ஜன் மேஜர்கள் மற்றும் அணிநடை பயிற்றுவிப்பாளர்கள், அணிநடை பயிற்றுனர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள்/ அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதாகும். இப் பயிற்சி அனைத்து படையணிகளிலும் தொழில்முறை மேம்பாடு, தலைமைத்துவ மேம்பாடு மற்றும் பயிற்சி தரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.
தொடக்க உரையை அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் ஆற்றினார். இது ஒரு தீவிர பயிற்சி திட்டத்திற்கு அடித்தளமாக அமையப்பட்டுள்ளது.