Header

Sri Lanka Army

Defender of the Nation

04th March 2025 14:05:52 Hours

இயந்திரவியல் காலாட் படையணியின் 18 வது ஆண்டு நிறைவு

இயந்திரவியல் காலாட் படையணியின் 18 வது ஆண்டு நிறைவை இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில், இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்ஏடி ஆரியசேன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 பெப்ரவரி 27 அன்று கொண்டாடியது.

வருகை தந்த படையணியின் படைத் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, போர் வீரர்கள் நினைவு தூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. நிகழ்வின் நினைவாக அவர் மரக்கன்று நாட்டியதுடன், அனைத்து நிலையினருக்குமான மதிய உணவிலும் கலந்து கொண்டார்.

பின்னர், படையணிகளுக்கு இடையிலான புதியவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 4 வது இடத்தைப் பெற்ற இயந்திரவியல் காலாட் படையணி குத்துச்சண்டை அணிக்கு படையணியின் படைத் தளபதி நிதி உதவி வழங்கினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.