02nd March 2025 14:13:34 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 23 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில், 23 வது காலாட் படைப்பிரிவு, 233 வது காலாட் பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் செவனப்பிட்டியவில் 70 சாமணேர துறவிகளுக்கு (புதிய துறவிகள்) அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை 2025 பெப்ரவரி 27 அன்று ஏற்பாடு செய்தனர்.
இச் சமூக நல திட்டத்தின் வெற்றிக்கு சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்களித்தனர்.