27th February 2025 15:25:06 Hours
மொனராகலை அனரத்த முகாமைத்துவ மையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 18 வது கெமுனு ஹேவா படையணி படையினர், 2025 பெப்ரவரி 24 அன்று மொனராகலை, ஹெனவல மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை விரைவாக அணைத்தனர்.
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ.எஸ்.என் ஹேமரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலில் 18 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 25 க்கும் மேற்பட்ட படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.