Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2025 16:30:15 Hours

'தூய இலங்கை' திட்டத்திற்கு வன்னி பாதுகாப்பு படையினரின் ஆதரவு

541 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர், 2025 பெப்ரவரி 24 அன்று மாந்தையில் உள்ள திருக்கேஸ்வரம் கோவிலில் பொதுமக்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் திட்டத்தை நடத்தினர்.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்துடன் புதுக்குடியிருப்பு மாவட்ட சித்த ஆயுர்வேத மருத்துவமனையின் வேண்டுகோளுக்கு இணங்க, தூய இலங்கை திட்டத்திற்கமைவாக, 6 வது கெமுனு ஹேவா படையணி படையினர், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன், 2025 மார்ச் 07 அன்று மருத்துவமனை வளாகத்தில் தூய்மைபடுத்தும் திட்டத்தை முன்னெடுத்தனர்.