26th February 2025 16:42:32 Hours
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் காலியில் உள்ள இலங்கை இராணுவ செயற்கை அங்கங்கள் மற்றும் எலும்பியல் பட்டறை - செனசுமவில் இரண்டாம் கட்ட மருத்துவ முகாமை 2025 ஜனவரி 25 அன்று ஏற்பாடு செய்தது. இந்த முயற்சியானது தென் மாகாணத்தில் உள்ள ஊனமுற்ற வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வது நோக்கமாகும்.
இந்த மருத்துவ முகாம், குறிப்பாக செயற்கை உறுப்புகள் அல்லது அறுவை சிகிச்சை சாதனங்கள் தேவைப்படும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு, அத்தியாவசிய ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தியது. சுமார் 300 இராணுவ வீரர்கள் இந்த முகாமில் பயனடைந்தனர். சுகாதார ஆலோசனைகள், செயற்கை உறுப்பு பராமரிப்பு, மனநல ஆலோசனை மற்றும் உணவு ஆலோசனைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. இம் மருத்து முகாமில் தோல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேவைகளுக்கான சிறப்பு சிகிச்சை நிலையஙகளும் இருந்தன.