Header

Sri Lanka Army

Defender of the Nation

24th February 2025 15:43:59 Hours

ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பக பணிப்பாளர் நாயகம் கம்பளை பென்ஹில் கல்லூரி வருடாந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளல்

இராணுவ தலைமையகத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டீஎன் மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி ஐஎஸ்சீ அவர்கள் கம்பளை பென்ஹில் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டி விழாவில் பிரதம அதிதியாக 15 பெப்ரவரி 2025 அன்று கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது, பங்குபற்றியவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றியதோடு, சமநிலையான வாழ்க்கைக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.