25th February 2025 14:16:07 Hours
இலங்கை கவசப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கே.எம்.எஸ் பெரேரா (ஓய்வு) பீஎஸ்சீ அவர்களுக்கு இராணுவ இறுதிச் சடங்கு சனிக்கிழமை (பெப்ரவரி 22) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் அவரது இராணுவத் தோழர்கள் மற்றும் அனுதாபத்தினர் கூட்டத்திற்கு மத்தியில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அனுதாபத்தினர்களும் மறைந்த சிரேஷ்ட அதிகாரிக்கு மரியாதை செலுத்துவதற்காக கலந்து கொண்டனர்.
இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பேழைக்கு படையினர் மயான நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கி மரியாதை செலுத்தினர்.
இறுதி ஊர்வலம் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் அதிகாரியின் பேழையை முறையாகப் பெற்றுக்கொண்டு குடும்ப உறுப்பினர்களுடன் மயானத்திற்கு அணிவகுத்து சென்றனர்.
இந்த நிகழ்வின் போது, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களால் விசேட கட்டளை பகுதி I இறுதி கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கு வாசிக்கப்பட்டது. இராணுவ அதிகாரி ஒருவரின் மறைவுக்குப் பின்னர் பெறக்கூடிய உயரிய அஞ்சலியான அடையாள துப்பாக்கி வணக்கம், மறைந்த சிரேஷ்ட அதிகாரிக்கு படையினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவரின் இறுதி மரியாதையை குறிக்கும் வகையில், லாஸ்ட் போஸ்ட் பியூகல் அழைப்பைத் தொடர்ந்து, பேழை தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவ கவச வாகன படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் மேஜர் ஜெனரல் கே.எம்.எஸ் பெரேரா (ஓய்வு) பீஎஸ்சீ அவர்களின் வாழ்க்கையில் ஆயுதப் படையில் நிரந்தர பாரம்பரியத்தைப் பின்பற்றி அவர் பெற்று கொண்ட அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.
இறுதிச் கிரியையில் சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மேஜர் ஜெனரல் கே.எம்.எஸ் பெரேரா (ஓய்வு) பீஎஸ்சீ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட கட்டளை பகுதி 1 பின்வருமாறு: