Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2025 16:39:24 Hours

இலங்கை கவசப் வாகன படையணியின் மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் பெரேரா (ஓய்வு) பீஎஸ்சீ அவர்கள் காலமானார்

சுகவீனமுற்றிருந்த இலங்கை கவசப் படையணியின் மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் பெரேரா (ஓய்வு) பீஎஸ்சீ அவர்கள் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் 2025 பெப்ரவரி 19 அன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 85 வயது.

மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் உடல் இறுதி அஞ்சலிக்காக 2025 பெப்ரவரி 20 காலை 8.30 மணி முதல், ஸ்டான்லி திலகரத்ன மாவத்தை எண் 168/5 நுகேகொடை என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்கு முழு இராணுவ மரியாதையுடன் பெப்ரவரி 22, 2025 அன்று மாலை 5.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.