Header

Sri Lanka Army

Defender of the Nation

21st February 2025 10:35:22 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் பாடசாலை தூய்மையக்கல் மற்றும் புனரமைப்பு திட்டம்

தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக படையினர் மேஜர் ஜெனரல் பீ.ஆர் பதிரவிரத்ன யூஎஸ்ஏடப்ளியூசீ அவர்களின் பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் 2025 பெப்ரவரி 20 அன்று பாடசாலை தூய்மையக்கல் மற்றும் புனரமைப்பு திட்டத்தை முன்னெடுத்தனர்.

மாவனகம பாடசாலை, பாபரவன பாடசாலை, பசுபிரதேஸ்வரம் பாடசாலை, கெப்பெட்டிபொல பாடசாலை, அசேலபுர மற்றும் லீலாரத்ன விஜேரத்ன மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தூய்மையக்கல் மற்றும் புனரமைப்பு திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கமைய, 24 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ், 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 பெப்ரவரி 24 அன்று தாரடிகுளம் ரஹூமானிய கல்லூரி மற்றும் மண்டூர் 37 நவகிரி கல்லூரியில் சுத்தம் மற்றும் புனரமைப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.

அதேவேளை, 242 வது காலாட் பிரிகேட் மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து 2025 பெப்ரவரி 26 அன்று கோரைக்களப்பு சக்தி வித்தியாலத்தில் தூய்மையக்கல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றினர்.