24th February 2025 14:08:20 Hours
இலங்கைக்கான அமெரிக்க தூதர் கௌரவ ஜூலி சங் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 பெப்ரவரி 19 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த மரியாதை நிமித்தமான விஜயத்தின் போது இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான அமெரிக்க உதவி பாதுகாப்பு ஆலோசகர் திரு. செத் ஏ. நெவின்ஸ் மற்றும் வெளிநாட்டுப் பிரிவு அதிகாரி கெப்டன் தாடியஸ் பிளாக் ஆகியோரும் உடனிருந்தனர்.