20th February 2025 12:04:03 Hours
11 வது காலாட் படைப்பிரிவு அதன் 15 வது ஆண்டு நிறைவை மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 பெப்ரவரி 14, அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கொண்டாடியது.
இராணுவ மரபுகளின்படி, தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து படையினருக்கான உரையும் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், அலுவலக வளாகத்தின் முன் புதிதாக நிலை நிறுத்தப்பட்ட 130 மிமீ பீரங்கித் துப்பாக்கியை அவர் திறந்து வைத்தார்.
அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.