Header

Sri Lanka Army

Defender of the Nation

18th February 2025 09:54:22 Hours

புத்தளம் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்தில் 421 புதியவர்களின் விடுகை அணிவகுப்பு

புத்தளம் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்திலிருந்து ஆட்சேர்ப்பு பாடநெறி இல - 37 இன் 421 புதிய சிப்பாய்கள் தங்கள் ஆறு மாத பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து விடுகை அணிவகுப்பின் பின்னர் 2025 பெப்ரவரி 14 அன்று வெளியேறினர்.

புத்தளம் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி நிலைய தளபதி லெப்டினன் கேணல் ஆர்ஜேஎன் சுபசிங்க ஐஜீ அவர்களின் அழைப்பின் பேரில், 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு, 1 வது இலங்கை சிங்க படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

சிறந்த ஆட்சேர்ப்பு வீரர், சிறந்த உடல் பயிற்சி வீரர் மற்றும் சிறந்த துப்பாக்கி சூட்டு வீரருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. பயிற்சி பெற்ற புதிய வீரர்கள் இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றவும் இராணுவ சம்பிரதாயங்களை பேணவும் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.