16th February 2025 21:54:11 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் 33 வது தளபதியாக மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 பெப்ரவரி 13ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.
22 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதிக்கு, 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மரக்கன்று நட்டியதுடன் படையினருக்கு உரையாற்றினார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன், நிகழ்வுகள் நிறைவடைந்தன.
22 வது காலாட் படைப்பிரிவின் அனைத்து பணியார்கள், பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.